திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் உதவிகலெக்டர் அலுவலகத்தை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் நெல் பயிருடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். யூரியாவிற்கு பதிலாக நீர்ம யூரியாவை பயன்படுத்த நிர்ப்பந்தம் செய்வதை நிறுத்த வேண்டும். அனைத்து கிராம பஞ்சாயத்திலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர்கள் நடேச ஆதித்தன் (திருச்செந்தூர்), வெள்ளைச்சாமி (ஏரல்), ஏரல் தாலுகா செயலாளர் சுப்புதுரை, மாவட்ட தலைவர் ராமையா, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story