மசினகுடி ஏரி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
மசினகுடி ஏரி அருகே கால்நடைகள் மேய்த்துக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
கூடலூர்
மசினகுடி ஏரி அருகே கால்நடைகள் மேய்த்துக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாபமாக பலியானார்.
மூதாட்டி பலி
மசினகுடி வன அலுவலகத்தின் பின்புறம் ஏரி உள்ளது. இதேபோல் ஊராட்சி மற்றும் மீன்வளத்துறை கிளை அலுவலகங்கள் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக விளங்குகிறது.
இந்த நிலையில் மசினகுடி ஏரி அருகே அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவரின் மனைவி சிவ நஞ்சம்மாள் (வயது 65) ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காட்டு யானை வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சிவ நஞ்சம்மாள் காட்டு யானையை கண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் சிவநஞ்சம்மாளை காட்டு யானை தாக்கியது.
இதில் உடல் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வனத்துறையினா் விசாரணை
இதனிடையே சத்தம் கேட்டு சிங்காரா வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அப்போது அங்கு சிவநஞ்சம்மாள் உயிரிழந்து கிடந்ததையும், அருகில் காட்டு யானை நிற்பதையைும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் துரத்தியடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சிவநஞ்சம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மசினகுடி ஏரி பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story