தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரியில் அணை கட்ட தமிழக அரசின் ஒப்புதல் தேவை எனும் நீதியை காற்றில் பறக்கவிட்டு அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசின் முதல்-மந்திரியும், மத்திய நீர்வளத்துறை மந்திரியும் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட ஆதரவாக பேசுவது 8 கோடி தமிழர்களின் உள்ளத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. எனவே காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் கார்குழலி, ஒன்றிய செயலாளர்கள் கோபி, ஜெகதீஸ், முத்து, கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story