ஹிஜாப் விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் இதயத்தை வெல்வோம்-மந்திரி பி.சி.நாகேஸ்


ஹிஜாப் விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் இதயத்தை வெல்வோம்-மந்திரி பி.சி.நாகேஸ்
x
தினத்தந்தி 15 March 2022 9:48 PM IST (Updated: 15 March 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் இதயத்தை வெல்வோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பிசி நாகேஸ் கூறினார்

பெங்களூரு:
தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் இதயத்தை வெல்வோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஹிஜாப் வழக்கில் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தவறாக வழிநடத்தப்பட்ட, அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட மாணவிகளின் இதயங்களை வெல்வோம். அவர்களும் கல்வி கற்க முயற்சி செய்வோம். அந்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து தங்களின் படிப்பை தொடருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கர்நாடக மக்கள் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பேசவும் இல்லை, அதற்கு எதிராக செயல்படவும் இல்லை. அதனால் வரும் நாட்களில் தவறாக வழிநடத்தப்பட்ட மாணவிகள் சரியான நிலைக்கு திரும்புவார்கள். ஐகோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக கல்வி சட்டம் 1983-ல் உள்ள சில குளறுபடிகள் சரிசெய்யப்படும். சீருடைகள் மாணவர்களிடையே தேசபக்தியை வளர்க்க உதவி புரிகிறது. அதனால் நாங்கள் சீருடை அணிவதை கட்டாயம் ஆக்குகிறோம். இதன் மூலம் மாணவர்கள் இன்னும் தாங்கள் குழந்தைகள் தான் என்பதை உணா்வார்கள்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Next Story