சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரிஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Related Tags :
Next Story