தர்மபுரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
தர்மபுரி ரெயில் நிலையத்தில் பெங்களூரு ரெயில்வே கோட்ட மேலாளர் ஷியாம் சிங் ஆய்வு செய்தார்.
தர்மபுரி:
தர்மபுரி ரெயில் நிலையத்தில் பெங்களூரு ரெயில்வே கோட்ட மேலாளர் ஷியாம் சிங் ஆய்வு செய்தார்.
கோட்ட மேலாளர் ஆய்வு
தென்மேற்கு ரெயில்வே பெங்களூரு கோட்ட மேலாளர் ஷியாம் சிங் பெங்களூருவில் இருந்து ஓசூர், பாலக்கோடு வழியாக தனி ரெயிலில் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு வந்தார். தர்மபுரி ரெயில் நிலையத்தில் நடைமேடைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணி, ரெயில் பாதை மின் மயமாக்கும் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, அலுவலகங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், ரெயில்வே போலீஸ் நிலையம், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ரெயில்வே பணியாளர்கள் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.
போலீசாருக்கு ஓய்வறை
அப்போது தர்மபுரி, சிவாடி, தொப்பூர் ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரியும் போலீசாருக்கு ஓய்வறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று போலீசார் மனு அளித்தனர். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story