பாலக்கோடு அரசு பள்ளியில் படித்து பணியில் சேர்ந்த 14 போலீசாருக்கு பாராட்டு
பாலக்கோடு அரசு பள்ளியில் படித்து பணியில் சேர்ந்த 14 போலீசாருக்கு பாராட்டு விழா நடந்தது.
பாலக்கோடு:
பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை படித்த மாணவர்களில் 14 பேர் விளையாட்டு துறை மூலம் போலீஸ் பணிக்கு தேர்வாகினர். அவர்கள் கடந்த வாரம் பணி ஆணையை பெற்றனர். அரசு பள்ளியில் படித்து போலீஸ் பணியில் சேர்ந்த 14 பேருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கலந்து கொண்டு பணியில் சேர்ந்த 14 பேருக்கும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், மஞ்சுளா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story