2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூர்:
திருப்பூர் செவந்தாம்பாளையம் சம்பத் தோட்டம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முத்துசாமி என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி அமராவதிபாளையம் பூச்சக்காடு தோட்டம் அருகே காரில் சென்றபோது அவரை வழிமறித்த கும்பல், காருடன் கடத்திச்சென்று செல்போனை பறித்து, ஏ.டி.எம்.கார்டை எடுத்து அதில் இருந்து பணத்தை எடுத்து விட்டு மதுரை மாவட்டம் நாகமலை அருகே அவரை தள்ளிவிட்டு காரை திருடிச்சென்றது.இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 26), விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியை சேர்ந்த அன்னபாண்டி (35), மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த டேவிட்ராஜ் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவக்குமார் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அன்னபாண்டி மீது 8 வழக்குகளும் உள்ளன. சிவக்குமாரும், அன்னபாண்டியும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமார், அன்னபாண்டி ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 14 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story