இறைச்சிக்கழிவுகளை கொட்டினால் ரூ5ஆயிரம் அபராதம்
இறைச்சிக்கழிவுகளை கொட்டினால் ரூ5ஆயிரம் அபராதம்
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் சாலையோரம் இறைச்சிக்கழிவுகளை கொட்டினால் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு்ள்ளது.
இறைச்சிக்கழிவுகள்
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் இறைச்சி கடைக்காரர்கள் கோழி மட்டும் ஆட்டு இறைச்சி கழிவுகளை கொட்டுவதாகவும், இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகும் என நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதனால் நேற்று நகராட்சி அலுவலகத்தில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைக்காரர்களை அழைத்து நகராட்சித்தலைவர் மு.கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ரூ.5ஆயிரம் அபராதம்
கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 1-ந்தேதிக்கு முன்பு கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளுக்கான முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். கோழி மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் கழிவுகளை சேகரித்து வைத்திருக்க வேண்டும். இந்த கழிவுகளை இதற்கென்று தனியாக வரும் நகராட்சி வாகனத்தில் கடைக்காரர்கள் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதை மீறி இறைச்சிகழிவுகளை பொது இடங்களை கொட்டினால் யார் என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், அதையும் மீறினால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்ட ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.சரவணன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story