களைகட்டிய பொய்கை வாரச்சந்தை


களைகட்டிய பொய்கை வாரச்சந்தை
x
தினத்தந்தி 15 March 2022 10:44 PM IST (Updated: 15 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

பொய்கை வாரச்சந்தை நேற்று களைகட்டியது. அப்போது ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அணைக்கட்டு

பொய்கை வாரச்சந்தை நேற்று களைகட்டியது. அப்போது ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொய்கை வாரச்சந்தை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கையில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கறவை மாடுகள், சினை மாடுகளை வாங்க திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, சித்தூர், பலமனேர் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். இதனால் கறவை மாடுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
ஒரு கறவை மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில்  நடந்த மாட்டுச்சந்தையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட காளை மாடுகள், சினை மாடுகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. காய் கறிகளும் விற்பனை செய்யப்பட்டது. 

ரூ.2 கோடிக்கு வர்த்தகம்

இதுகுறித்து சந்தை நடத்தும் எலதாரர்களில் ஒருவரான வெங்கடேசன் கூறுகையில் பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் வாரச்சந்தை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிக அளவில் விற்பனையும் நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று மாதம் வாரச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக வர்த்தகம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என கூறினார்.
அதேபோன்று ரூ.2 கோடிவரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.



Next Story