வங்கி முறைகேடு வழக்கில் பா.ஜனதா தலைவர் மீது வழக்கு
வங்கி முறைகேடு புகாரில் பா.ஜனதா தலைவர் பிரவின் தாரேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
வங்கி முறைகேடு புகாரில் பா.ஜனதா தலைவர் பிரவின் தாரேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஆம் ஆத்மி புகார்
பா.ஜனதாவை சேர்ந்த பிரவின் தாரேகர் மராட்டிய மேல்-சபை எதிர்கட்சி தலைவராக உள்ளார். இவர் மீது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தனஞ்செய் ஷிண்டே கடந்த ஜனவரி மாதம் மும்பை எம்.ஆர்.ஏ. மார்க் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் அவர், "பிரவின் தாரேகர் தொழிலாளி என பொய்யான தகவலை கூறி மும்பையில் உள்ள வங்கியில் 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சேர்மனாக இருந்து உள்ளார். அப்போது வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது" என கூறியுள்ளார்.
வழக்குப்பதிவு
மேலும் அந்த வங்கியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாகவும் தனஞ்செய் ஷிண்டே குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக பிரவின் தாரேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது மோசடி, நம்பிக்கை மீறல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் சி.பி.ஐ., வருமான வரித்துறையினர் என மத்திய முகமைகள் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாநில அரசு போலீசார் மூலம் பா.ஜனதா தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story