எடை குறைவாக விற்கும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை நுகர்வோர் தின விழாவில் வலியுறுத்தல்


எடை குறைவாக விற்கும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை நுகர்வோர் தின விழாவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 March 2022 10:51 PM IST (Updated: 15 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

எடைகுறைவாக விற்கும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை
எடைகுறைவாக விற்கும் ரேஷன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டையில் உலக நுகர்வோர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தென் சென்னை நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் பி.பி.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாகவும், சில சமயங்களில் அரிசி உள்ளிட்டவை தரமற்றதாவும் உள்ளது. 

கலெக்டர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரேஷன்கடைகளில், திடீர் சோதனையிட்டு, எடைக்குறைவை கண்டுபிடித்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீதும், விற்பனையாளர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள வார்டுகளில், மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் மோட்டார் வைக்காமல் குழாய் குடிநீரை உபயோகிக்கும் நுகர்வோரின் வீடுகளுக்கு தண்ணீர் வராமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே நகராட்சி அதிகாரிகள் அனைத்து வார்டு பகுதிகளிலும், திடீர் சோதனையிட்டு, மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சும் நுகர்வோரின் மோட்டார்களை, பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் அவர்களின் குடிநீர் இணைப்பையும் துண்டித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணிப்பேட்டை வாரச்சந்தை, சிப்காட் வாரச்சந்தை, அம்மூர் வாரச்சந்தை உள்ளிட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சந்தைகளில், நுகர்வோர்கள் வாங்கும் காய், கனி உள்ளிட்ட பொருட்களில் எடைக்குறைவு காணப்படுகிறது. இதை மாவட்ட கலெக்டர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையிட்டு, எடைக்குறைவாக விற்கும் வியாபாரிகள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் நுகர்வோர் பாதுகாப்பு குழு நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
==========

Next Story