வேலூரில் 99 டிகிரி வெயில். பொதுமக்கள் அவதி


வேலூரில் 99 டிகிரி வெயில். பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 March 2022 10:52 PM IST (Updated: 15 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் 99 டிகிரி வெயில் அடித்தது. இதனால் அனல்காற்று வீசியது.

வேலூர்

கோடைக்காலத்தில் மற்ற மாவட்டங்களைவிட வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. 
வேலூாில் கடந்த 13-ந்தேதி 96.4 டிகிரியும், நேற்று முன்தினம் 98.6 டிகிரியும், நேற்று 99 டிகிரியும் வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலால் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இளநீர், கரும்புசாறு, குளிர்பானம், ஜஸ்கிரீம், ஜூஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனல் காற்று வீசியதால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதிக்கு உள்ளாகினர். ஓரிரு நாளில் வெயில் 100 டிகிரி பதிவாக வாய்ப்புள்ளது. 

கோடை மழை பெய்து பூமியை குளிர செய்யாதா என்று பொதுமக்கள் தற்போதே எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.

Next Story