வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றியம் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஊரக ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி, ஒன்றிய பொறியாளர் கோமதி, ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ஆசிரியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் வேளானந்தல் ஊராட்சியில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறை கட்டிடத்தையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story