மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு விரைவாக கிடைக்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு விரைவாக கிடைக்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:-
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு விரைவாக கிடைக்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ காப்பீடு திட்டம்
ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான மருத்துவக்காப்பீடு திட்டத்தில் மாதந்தோறும் ரூ.350 வீதம் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
இதில் மருத்துவ செலவுகளுக்கு கிடைக்கும் இழப்பீடு குறைவாக உள்ளதாக கூறியும், இழப்பீடு கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்க எடுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு இழப்பீடு விரைவில் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story