கட்டிட மேஸ்திரி வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
அரக்கோணம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் 13 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் 13 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 58), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி சென்னை தாம்பரத்தில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் சேகர் மற்றும் மகாலட்சுமி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை தாம்பரத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை சேகர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அந்தப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். அவர்கள்
உடனடியாக இதுகுறித்து சேகருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 13 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story