மதுக்கடை ஊழியர்களுக்கு பாட்டில் குத்து
திருத்துறைப்பூண்டி அருகே கடனுக்கு மது தராததால் மதுக்கடை ஊழியர்களை பாட்டிலால் குத்திய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே கடனுக்கு மது தராததால் மதுக்கடை ஊழியர்களை பாட்டிலால் குத்திய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாட்டில் குத்து
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மாங்குடி கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் இந்த மதுக்கடையில் கடனுக்கு மது கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடனுக்கு மது தர முடியாது என ஊழியர்கள் சூரியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் கூறினர். இதனால் ஆத்திரமடடைந்த 5 பேர் கொண்ட கும்பல் மதுக்கடையில் இருந்த மதுபாட்டில்களை சேதப்படுத்தி ஊழியர்கள் இருவரையும் மதுபாட்டில்களை உடைத்து குத்தினர். இதில் ஊழியர் சூரியமூர்த்திக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்தில் இருந்து 5 பேரும் தப்பி ஓடி வி்ட்டனர்.
போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து அவரும், ராமச்சந்திரனும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று
விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story