மயிலம் முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்


மயிலம் முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 11:11 PM IST (Updated: 15 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.

மயிலம், 

மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான  விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 அதனை தொடர்ந்து தினந்தோறும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 5.45 மணிக்கு நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள விநாயகர், முருகன் தேர்களை சீரமைத்து அலங்கரிக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

தெப்ப உற்சவம்

 இந்த பணியை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் பார்வையிட்டார். விழாவி்ன் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவமும், 19-ந்தேதி முத்துப்பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 20-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சமும் நடைபெற உள்ளது.

Next Story