குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 15 March 2022 11:12 PM IST (Updated: 15 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.

கொள்ளிடம்:
கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றங்கரை தெரு உள்ளது. இந்த தெருவின் வழியாக பூமிக்கடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் கொள்ளிடம் சந்தப்படுகை, திட்டுபடுகை, அனுமந்தபுரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களின் நலன் கருதி கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story