தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 15 March 2022 11:23 PM IST (Updated: 15 March 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், தொட்டியம்-அரங்கூர் குறுக்கு சாலை மண் சாலையாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தற்போது சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி. 

ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே   நொய்யல்- பரமத்தி வேலூர் செல்லும்  சாலையின் ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின் கம்பத்திலிருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது  அதன் அடிப்பகுதி சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சாலையில் வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது அதன் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டும் அதில் மின் இணைப்புகள் மாற்றப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
வேலு ,பாலத்துறை, கரூர்.

மலைப்பாதையில் பள்ளம் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளத்தில்  பாலதண்டாயுதபாணி சுவாமி மலை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் பாதை மற்றும் இரு சக்கர இலகுரக வாகனங்கள் செல்வதற்கு 400 மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையில் ஒரு இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் சாலையின் ஒரு புறம் பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்படாமல் இருக்கிறது.  எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பக்தர்கள், செட்டிக்குளம், பெரம்பலூர். 

கூடுதல் பஸ் இயக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் திருச்சி வழித்தடத்தில் சென்று வந்த பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால் இப்பகுதி மக்கள் குறித்த நேரத்திற்கு வெளியூர் சென்றுவர பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர். 

குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் சிலட்டூர் பஞ்சாயத்து, கொல்லன்வயல் கிராமத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொல்லன்வயல், புதுக்கோட்டை. 

பராமரிக்கப்படாத பெருமாள் கோவில்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நெய்வேலி கிராமம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் உள்ளது. இது 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோவில் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. தற்போது இந்த கோவில்களில் மின் இணைப்பு இன்றி உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கோவில் மேல் பகுதியில்  செடி மரம் வளர்ந்து பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
லோகநாதன், நெய்வேலி, திருச்சி. 

புகைபிடிப்பது தடுக்கப்படுமா? 
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பொது இடங்களில் பயணிகள் புகை பிடிப்பதினால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்க பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

குளமாக மாறிய ரெயில்வே சுரங்கப்பாதை
திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் எப்போதும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக ரெயில்வே பாதையை கடக்க முடியாமல் ரெயில்வே தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மாலதி, லால்குடி, திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வாணப்பட்டரை முதல் வளையல் காரத்தெரு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி. 


Next Story