போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 15 March 2022 11:53 PM IST (Updated: 15 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

ஆரணி

ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரணி ஒன்றிய விடுதலை சிறுத்தை அமைப்பாளரும், ஆட்டோ டிரைவரான மோகன் சப்- இன்ஸ்பெக்டர் தருமனிடம் வழக்கு சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

 அப்போது மோகனை சப்-இன்ஸ்பெக்டர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மோகன் விஷம் குடித்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

மேலும் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் நிர்வாகம் சப்-இன்ஸ்பெக்டர் தருமனை செங்கம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தது.

Next Story