புலியூரில் வரும்முன் காப்போம் திட்டம்
புலியூர் கிராமத்தில் தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
திருப்புவனம்,
-
திருப்புவனம் யூனியனை சேர்ந்த புலியூர் கிராமத்தில் தமிழக அரசின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு யூனியன் சேர்மன் சின்னையா தலைமை தாங்கினார். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரவி அனைவரையும் வரவேற்றார். வரும் முன் காப்போம் திட்டம் முகாமை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும் சத்தான உணவு பொருட்கள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 1,036 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இதில் 39 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 35 பேருக்கு இ.சி.சி.யும் பார்க்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் மருத்துவ துறையினர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story