முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மற்றும் மலைவாழ் மக்கள் லேம்ப் சொசைட்டியில் 2020-ம் ஆண்டு தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு முன்னதாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் 5 பவுனுக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தள்ளுபடி செய்ய மறுத்து அபராத வட்டி கட்ட சொல்லி கட்டாயப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தியும், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக் கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story