ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்


ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 12:28 AM IST (Updated: 16 March 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாவில் உள்ள காமாஷி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

வாலாஜா

வாலாஜாவில் உள்ள காமாஷி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி சாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.

பின்னர் அலங்னகரிக்கப்பட்ட தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பக்தர்களுடன் கைத்தறி மற்றும் துணிநூல்துறைஅமைச்சர் ஆர்.காந்தி
தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார் 

இதில் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகி வினோத் காந்தி மற்றும் நகரமன்றதலைவர் ஹரிணிதில்லை, நகர பொறுப்பாளர் து.தில்லை, நகரமன்றதுணைதலைவர் டபிள்யு எம்.கமல்ராகவன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் முக்கியள வீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தது. அதன்பின் சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்பினர்.

Next Story