தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், அதற்கு துணை போவதாக மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சம்மட்டியின் புகைப்படத்தை கர்நாடக அரசுக்கு வாழ்வுரிமை கட்சியினர் தபால் மூலம் அனுப்ப முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
்
Related Tags :
Next Story