புதுக்கோட்டையில் குளங்களை தூய்மைப்படுத்தும் பணி
புதுக்கோட்டையில் குளங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில், மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்கள் பல உள்ளன. இதில் சில குளங்கள் ஆக்கிரமிப்புகளால் அளவு குறைந்து போயின. இதன் காரணமாக புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள குளங்களில் மழை காலங்களில் நீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடும் நிலை உள்ளது. மேலும், குளக்கரைகள் தூய்மை இல்லாமல் காணப்படுகிறது. ஆகவே, குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின்பேரில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் குளங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. இந்தப்பணியை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார். முதலாவதாக திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் குளக்கரையில் பொக்லைன் எந்திரம் மூலம் தூய்மை பணி நடைபெற்றது. இதில், முத்துராஜா எம்.எல்.ஏ., நகராட்சி துணைத்தலைவர் லியாகத் அலி மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில்குமார் கூறுகையில், நகராட்சியில் உள்ள குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்படும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரத்து வாரிகள் சரிசெய்யப்படும். மழைநீர் சாலைகளில் ஓடாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story