சிறந்த விவசாயிக்கான பரிசு பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
சிறந்த விவசாயிக்கான பரிசு பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
இயற்கை வேளாண்மை சாகுபடி, விளை பொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாரம்பரிய முறையை பின்பற்றி அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளையும், வேளாண்மை ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஏற்றுமதியாளர்களையும், அதேபோல் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசு வழங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதற்காக மாநில அரசு ரூ.6 லட்சம் ஒதுக்கியுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலும், வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலும், இயற்கை வேளாண்மை சாகுபடி தலைப்பிலும், வேளாண்மை விளைபொருட்கள் ஏற்றுமதி தலைப்பிலும் ஆர்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இதற்கான விண்ணப்ப படிவம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கிடைக்கும். அதனை பூர்த்தி செய்து, பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் உரிய அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story