ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 1:34 AM IST (Updated: 16 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை முறைப்படுத்த வேண்டும். எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், முன்பணம் இன்றி சிகிச்சைக்கு அனுமதித்து மருத்துவ செலவினங்களை காப்பீட்டு நிறுவனங்களே உடனடியாக செலுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் பணத்தை பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை, சலுகைகள் வழங்குவதில் காலதாமதம் செய்யும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும். ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க பொருளாளர் சுந்தரபாண்டியன், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கோசிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பரமாத்மா நன்றி கூறினார்.

Next Story