ரூ.3 லட்சம் பட்டாசு மூலப்பொருட்கள் பறிமுதல்
ஏழாயிரம் பண்ணை அருகே ரூ.3 லட்சம் பட்டாசு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாயில்பட்டி,
ஏழாயிரம் பண்ணை அருகே ரூ.3 லட்சம் பட்டாசு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள இ.ராமநாதபுரத்தில் கங்கரகோட்டை சின்னப்பன் மகன் சரம் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்ததால் பட்டாசு உற்பத்தி தடை செய்யப்பட்டது.
இந்த பட்டாசு ஆலையில் மூலப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பட்டாசு தனி தாசில்தார் ரங்கசாமி, சிவகாசி தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் குமரேசன், விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார், ராஜபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இ.ராமநாதபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மூலப்பொருட்கள் பறிமுதல்
அப்போது சரம் மாரியப்பனின் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர். அப்போது பட்டாசு உற்பத்திக்கு தேவையான 245 கிலோ கரிதூசி, அலுமினிய பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், 300 கிலோ கந்தகம் உள்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசு தயாரிக்கக்கூடிய மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உயிர் சேதம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பொருள் என்பதால் கொண்டு செல்ல முடியவில்லை. ஆதலால் பட்டாசு மூலப் பொருட்கள் தனி தாசில்தார் ரங்கசாமி உத்தரவின்பேரில் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள இடிதாங்கி பொருத்திய அறையில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் அய்யலுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பனை மரத்தடியில் சல்பர் மூடைகள் ஏற்றப்பட்ட வாகனம் மறைத்து வைத்திருப்பதையும் சிறப்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக சல்பர்மூடை ஏற்றப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து கிராம நிர்வாக அலுவலர் மருதுபாண்டி ஏழாயிரம்பண்ணை போலீசில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story