வேளாண்மை துறை கருத்தரங்கம்


வேளாண்மை துறை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 16 March 2022 2:09 AM IST (Updated: 16 March 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வேளாண்மைத்துறை கருத்தரங்கை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம்:-
சேலம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் தலைமை தாங்கி பேசும் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த கருத்தரங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும், வேளாண் வணிகத்துறை திட்டங்கள், தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் செயல்முறைகள் குறித்து எடுத்து கூறப்பட உள்ளது. விவசாயிகள் சந்தையின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி பொருட்களை விளைவிக்கவும், அதனை மதிப்பு கூட்டு பொருளாக தயாரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கருத்தரங்களில் வைக்கப்பட்டு இருந்த காய்கறிகளை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

Next Story