விபத்தில் கூட்டுறவு சங்க ஊழியர் பலி


விபத்தில் கூட்டுறவு சங்க ஊழியர் பலி
x
தினத்தந்தி 16 March 2022 2:10 AM IST (Updated: 16 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே விபத்தில் கூட்டுறவு சங்க ஊழியர் பலியானார்.

தலைவாசல் அருகே

தலைவாசல், மார்ச்.16-
தலைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 52). இவர் தலைவாசலை அடு்த்த மணிவிழுந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தலைவாசல் பகுதியில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டு தற்போது குடியிருக்கும் மும்முடி முருகா நகரிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story