தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 2:10 AM IST (Updated: 16 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சூரமங்கலம்:-
காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் எதிரில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆட்டோ சுந்தர், மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் ஜெய மோகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமை கழக பேச்சாளர் தமிழ் வீர சோழன் ஆகியோர் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றினர், ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்தும் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, இளைஞரணி அமைப்பாளர்கள் நீலமேகம், நீலகண்டன், மாநகர் மாவட்ட செயலாளர் கவியரசர், மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் சூர்யா பாலு உள்பட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story