திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 March 2022 2:23 AM IST (Updated: 16 March 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்ட் சீட் பாரம் ஏற்றிக்கொண்டு மாலை 6 மணி அளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில்  ஒரு வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றது.
இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு இரவு 8 மணி அளவில் லாரி பழுது நீக்கப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன. லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story