மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மண்டைக்காடு கோவில்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்வதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 8-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
எட்டாம் கொடை விழா
இந்த கோவிலில் எட்டாம் கொடைவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு பூமாலை, 10 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தன.
விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிலை சுற்றி உள்ள தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story