காட்பாடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காட்பாடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2022 5:40 PM IST (Updated: 16 March 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 20), எலக்ட்ரீசியன். இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த விக்னேஷ் வீட்டை விட்டு வெளியேறி வண்டறந்தாங்கல் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூணில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை  அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர் தற்கொலைதான் செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story