வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம். கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
வேலூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேலூர்
வேலூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்திசிலை அருகே நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பதாகைகளை கையில் ஏந்தி...
ஊர்வலம் காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை, மக்கான் சிக்னல் சந்திப்பு, பழைய பஸ்நிலையம், தெற்கு போலீஸ் நிலையம், அண்ணாசாலை வழியாக சென்று வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஜூனியர் ரெட்கிராஸ், பாரத சாரண சாரணியர், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர்படை மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஊர்வலத்தில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சாலை பாதுகாப்புக்குழு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் சிவவடிவு, பாரத சாரண சாரணிய மாவட்ட செயலாளர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காதில் பூ வைத்து விழிப்புணர்வு
ஊர்வலத்தை தொடங்கி வைத்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் அந்த வழியாக சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கையில் ரோஜாப்பூ வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாதவர்களின் காதில் பூ வைத்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story