கயத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு


கயத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 March 2022 6:41 PM IST (Updated: 16 March 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்

கயத்தாறு:
கயத்தாறு அருகே உசிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. விவசாயி. இவருடைய மகன் அண்ணாத்துரை. இவரும் விவசாயி. இவரது தம்பி பவுன்துைர. இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக நேற்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் அண்ணாத்துரையை பவுன்துரை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாத்துரை அலறிக் கொண்டு கீழே விழுந்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்தவுடன் பவுன்துரை தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் அண்ணாத்துரையை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பவுன்துரையை தேடிவருகின்றனர்.

Next Story