பெண் போலீஸ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்


பெண் போலீஸ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 16 March 2022 6:58 PM IST (Updated: 16 March 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

திருச்சி, மார்ச்.17-
திருச்சி பொன்மலை கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் லட்சுமி (வயது 70), சசிகலா (36), சந்திரா. இவர்களது குடும்பத்தினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் தெருவில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவர், எங்கள் வீட்டின் அருகே உள்ள பாதையையும், இடத்தையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். இதுபற்றி கேட்டபோது, அவரும், அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஏற்கனவே பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மனு ரசீது வழங்கியுள்ளனர். ஆனால் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இதுகுறித்து விரைந்து விசாரணை நடத்தி எங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தனர். மேலும், இந்த புகார் குறித்து போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) அலுவலகத்துக்கும் சென்று மனு அளித்தனர்.

Next Story