சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்


சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 16 March 2022 7:00 PM IST (Updated: 16 March 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

தேனி:

கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 85 ஆயிரத்து 815 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், 8 லட்சத்து 23 ஆயிரத்து 107 டோஸ் முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 88 ஆயிரத்து 669 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 7,039 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்  நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 

அதன்படி தேனி மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. பள்ளிகளிலும் இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

59 ஆயிரம் சிறுவர், சிறுமிகள்

தேனி கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்டன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தேனி மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகள் சுமார் 59 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே வருகிற 28-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

Next Story