மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
மாணவமாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
அவனாசி:
திருப்பூர் மாவட்டத்தில் கோரானா 2-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, குழந்தைகளை நோயின் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 12 முதல் 14 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க போடப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 12-14 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 73,100 பேர் உள்ளனர். இந்த தடுப்பூசியானது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கே சென்று செலுத்தப்பட உள்ளது. பள்ளி செல்லாத சிறார்களுக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இப்பணிக்காக சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் நலவாழ்வு திட்ட மருத்துவக்குழு, நடமாடும் மருத்துவக்குழு, இதர மருத்துவ குழுக்கள், பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பணியாளர்கள், பல்வேறு துறைகளைச்சார்ந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த முகாமிற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது.
Related Tags :
Next Story