100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 March 2022 9:30 PM IST (Updated: 16 March 2022 9:30 PM IST)
t-max-icont-min-icon

சிறுவளையம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெமிலி

சிறுவளையம் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பணித்தள பொறுப்பாளரை மாற்ற முடிவு

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் சிறுவளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணித்தள பொறுப்பாளர்களாக 6 பேர் உள்ளதாகவும், இவர்களில் ஒரு சிலர் பணிக்கு வராதவர்களின் பெயர்களையும் வருகை பதிவேட்டில் முறைகேடாக சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 எனவே முறைகேடாக செயல்படும் சம்மந்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர்களை மாற்றி விட்டு அவர்களுக்கு பதிலாக புதிதாக பணித்தள பொறுப்பாளர்களை நியமிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சாலை மறியல்

இதை அறிந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பணித்தள பொறுப்பாளர்களை மாற்றக்கூடாது என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story