உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
உடுமலை:
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த மாதம் நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாரியம்மன் கோவில்
கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழ் நாடு முழுவதும் கோவில் திருவிழாக்களை நடத்திக்கொள்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்கிறது.
அடுத்தமாதம் 5-ந்தேதி மாலை 4 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும்,மாலை 6 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12-ந்தேதி இரவு 7 மணிக்கு கம்பம் போடுதல் (நடுதல்) நிகழ்ச்சியும், 14-ந்தேதி இரவு 12 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகளும், 15-ந்தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், 2 மணிக்கு பூவோடு ஆரம்பம் நிகழ்ச்சியும், 19-ந்தேதி இரவு 10 மணிக்கு பூவோடு நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்டம்
20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 21-ந்தேதி காலை 6.45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு ஸ்ரீலலிதா திரிசதி நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பரிவேட்டை, வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
23-ந்தேதி காலை 8.15 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மகாபிஷேகம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.
15-ந்தேதி முதல் தினசரி இரவு 7.30 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெறும். 15-ந்தேதி முதல் தினசரி மாலை கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆலோசனை கூட்டம்
இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது.
Related Tags :
Next Story