கர்நாடகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.971 கோடி நிவாரணம்-மந்திரி ஆர்.அசோக்


கர்நாடகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.971 கோடி நிவாரணம்-மந்திரி ஆர்.அசோக்
x
தினத்தந்தி 16 March 2022 10:01 PM IST (Updated: 16 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.971 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மேல்-சபையில் மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்

பெங்களூரு: கர்நாடக மேல்-சபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சலீம் அகமது கேட்ட கேள்விக்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நடப்பு நிதி ஆண்டில் மழை வெள்ளம் காரணமாக 13.68 லட்சம் எக்டேர் விவசாய பயிர்கள் நாசமாகியது. இதற்காக 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.971 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய நிவாரணத்துடன் மாநில அரசும் தனது பங்குக்கு நிவாரணத்தை வழங்குகிறது. 

இதற்கு முன்பு பயிர்கள் சேதமடைந்து 8 மாதங்கள் வரை நிவாரணம் வழங்கப்படவில்லை.ஆனால் இப்போது பயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் அரசுக்கு வந்ததும், நிவாரணம் வழங்கப்படுகிறது. எங்கள் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கிறது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story