கல்வராயன்மலையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
கல்வராயன்மலையில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் மலைவாழ் மக்களுக்கு காசநோய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருண், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஷாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக மேலாளர் அழகு ராஜா வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் பொய்யாமொழி குமரன் கலந்து கொண்டு காசநோய் வருவதன் அறிகுறிகள், அதை எவ்வாறு தடுப்பது மற்றும் தூய்மை பணிகள் குறித்தும் விளக்கி பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கடகிருஷ்ணன், வெள்ளிமலை ரத்தினம், குண்டியாநத்தம் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பழனி, அலுவலக கணக்காளர் செல்வராஜ் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story