கி.பி.15-ம் நூற்றாண்டு வில்வீரன் நடுகல் கண்டுபிடிப்பு


கி.பி.15-ம் நூற்றாண்டு வில்வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 March 2022 10:21 PM IST (Updated: 16 March 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே 15-ம் நூற்றாண்டு வில்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செந்துறை: 

நத்தம் அருகே உள்ள செங்குறிச்சியை அடுத்த குப்பாயூர் கிராம பகுதியில் பழங்கால வரலாறு தொடர்பாக பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி களஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கருப்பையா, கம்பளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் க.சுப்பு, உலகநாத பாண்டியன், அருள்செழியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 

அப்போது அந்த கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவருடைய தோட்டத்தில் மூக்கரை பிள்ளையார் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வில் வீரன் நடுகல் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது 3½ அடி உயரம், 1½ அடி அகலம் கொண்டதாக இருந்தது. அந்த நடுகல் கி.பி.15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று பேராசிரியர் விளக்கி கூறினார். 

மேலும் பழங்காலத்தில் குப்பாயூர் என்ற கிராமம் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியாகும். இப்பகுதியில் வாழ்ந்த ஒரு வில் வீரனின் வீர மரணத்தின் நினைவாக இந்த நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம். இதில் நின்று கொண்டிருக்கும் வீரனின் முகம் தேய்ந்து உள்ள நிலையிலும், வலதுபக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்டும், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் அணிகலன்கள் அணிவித்து அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது என்று களஆய்வில் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. 


Next Story