1 லட்சத்து 51 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் கூறினார்.
நாகப்பட்டினம்;
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் கூறினார்.
1 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன்
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 51 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. 55 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு ரயில் வேகன்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதிக்குள் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் நடந்து வருகிறது.
நடவடிக்கை
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள 5 திறந்தவெளி மையத்தில் சேமிக்கப்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக (நெல் கொள்முதல் மற்றும் இயக்கம்) துணை மேலாளர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story