சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 16 March 2022 11:10 PM IST (Updated: 16 March 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாட்டு நலப்பணித் திட்டம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து புதுக்கோட்டை கோர்ட்டு அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் மோகன்ராஜா தலைமை தாங்கினார். டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ., நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு கையேடு வழங்கினர். ஊர்வலம் அரசு பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் வழியாக நகர் மன்றத்தில் முடிவடைந்தது.  தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற தலைப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ், மாணவர்களிடையே உரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  ஆரோக்கியசாமி நன்றி கூறினார். 

Next Story