திருக்குவளை தியாகராஜர் கோவில் குடமுழுக்கு பணிகள்
திருக்குவளை தியாகராஜர் கோவில் குடமுழுக்கு பணிகள்
வேளாங்கண்ணி;
திருக்குவளையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1999-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சாமிகள் திருப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப அலங்காரம் நடைபெற்றது. பின்னர்
யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடத்தில் இருந்த
புனித நீர், மாதிரி விமான படங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story