பல்பொருள் அங்காடியில் கலெக்டர் திடீர் ஆய்வு காலாவதி தேதியை பார்த்து வாங்க அறிவுரை
- ராணிப்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது கடையில் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம், பொருட்களை வாங்கும்போது அடிப்படை நுகர்வோர் உரிமைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு பொருட்களின் தரம், காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு நுகர்வோரும் அடிப்படை உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும், நுகர்வோர் பொருளை வாங்கும்போது அதிக விலைக்கு வாங்கக் கூடாது, ரசீது கேட்டு வாங்க வேண்டும், தரம், சேவை குறைந்து இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி உரிமையைக் கேட்டுப் பெறலாம்.
தற்போது நுகர்வோர் உரிமை சட்டத்தில் திருத்தங்கள், வாடிக்கையாளர்கள் பொருட்களை தரமானதாக வாங்க வழிவகை செய்துள்ளது என்றார்.
Related Tags :
Next Story