திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரங்கிப்பேட்டை பெரியமதகு அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை பெரியமதகு அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மங்கள வாத்தியம் இசைக்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோவில் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் பெரியமதகு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story